5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கத்தை தட்டிச்சென்ற இந்திய வீராங்கனை பாருல் சௌத்ரி!

ஆசிய விளையாட்டு போட்டியில் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவை சேர்ந்த பாருல் சௌத்ரி தங்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். இது இந்தியாவின் 14வது தங்கம் ஆகும்.  19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ்…

ஆசிய விளையாட்டு போட்டியில் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவை சேர்ந்த பாருல் சௌத்ரி தங்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். இது இந்தியாவின் 14வது தங்கம் ஆகும். 

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ம் தேதி தொடங்கி அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சீனா, ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, ஈரான், கஜகஸ்தான் உள்ளிட்ட 45 நாடுகள் பங்கேற்றுள்ளன. இன்று நடைபெற்ற மகளிருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் பாரூல் சௌத்ரி தங்கம் வென்று அசத்தியுள்ளார். இது இந்தியாவுக்கு 14வது தங்கம் ஆகும்.

பாரூல் சௌத்ரி நேற்று நடந்த 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்றிருந்தார். இதன் மூலம் இந்த ஆண்டு ஆசிய போட்டிகளில் பாரூல் மொத்தம் இரண்டு பதக்கங்களை இந்தியாவுக்காக வென்று கொடுத்துள்ளார். கடைசி 100 மீட்டரில் ஜப்பானின் ரிரிகா ஹிரோனகாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு 15:14.75 வினாடிகளில் 5 ஆயிரம் மீட்டரைக் கடந்து வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் வென்றார் பாரூல்.

இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார் பாரூல் சௌத்ரி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.