நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (ஜூலை 20) தொடங்கிறது. இக்கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் கலந்து கொள்கிறார்கள்.
எதிர்கட்சிகள் இக்கூட்டத்தில் அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு, நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பும் என்று தெரிகிறது. மேலும் நேற்று ஐந்தர்மந்தரில் இருந்து சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை வெளியேற்றிய விவகாரம் பற்றியும் விவாதிக்க வாய்ப்புள்ளது.




