இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது.
இதனால் தொடர் 1 – 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்திய நேரப்படி இப்போட்டி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. லண்டனில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை கைப்பற்றும். தொடரை வெல்ல இரு அணிகளும் மும்பரம் காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவு இருக்காது.




