முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல்: நிர்வாகிகளுக்கு ம.நீ.ம கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவுரை

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து விவாதித்து உள்ளோம் என்றும் ஆனால் இப்போது விவரிக்க முடியாது என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சியும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிவிட்டது. கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மாநில நிர்வாகிகளோடு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

85 மாவட்டச்செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை கமல்ஹாசன் வழங்கினார். ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன், 2024 ல் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து இன்றைய கூட்டத்தில் பேசினோம் என்றார்.

கூட்டணி குறித்து விவாதித்து கொண்டு உள்ளோம். இப்போது விவரிக்க முடியாது. பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என தெரிவித்தார். முன்னதாக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியுள்ள கமல்ஹாசன், நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தேர்தலுக்கான வேலைகளை நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். கிளை அளவில் கட்சியை பலப்படுத்தவும் கடந்த முறை தேர்தல்களில் செய்த தவறுகளை வரும் நாடாளுமன்ற தேர்தலில் செய்யக் கூடாது எனவும் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை; கேரள அரசு

G SaravanaKumar

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Web Editor

குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்வு-தலைவர்கள் வாழ்த்து

Web Editor