முக்கியச் செய்திகள் தமிழகம்

வீட்டு வசதி வாரியத்திற்கு அபராத தொகை செலுத்தாதவர்களின் வட்டி தள்ளுபடி -அமைச்சர் சு.முத்துசாமி

வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் அபராத தொகை செலுத்தாதவர்களுக்கு 53 கோடி ரூபாய் அபராத வட்டி தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துச்சாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அரும்பாக்கம் பகுதியில் 450 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சு. முத்துச்சாமி , 214 கோடி ரூபாய் செலவில் 11 தளங்கள் கொண்ட வணிக வளாகம் 304 குடியிருப்புகள் கொண்ட மாடி அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டு வசதி வாரியம் சார்பில் நடைபெற்று வரும் சில திட்டங்களை முதலமைச்சர் ஆணைப்படி ஆய்வு செய்தோம். தொடர்ந்து ஷெனாய் நகர், நந்தனம் பிரேம் காலணி உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் 558.86 கோடி செலவில் பணிகளையும் ஆய்வு செய்ய உள்ளோம் என்றார்.

அரும்பாக்கம் பகுதியில் இரண்டு திட்டங்கள் நடக்கிறது. அடுக்கு மாடி குடியிருப்பு மொத்தம் 19 மாடி பார்க்கிங் 2 தளங்கள் கொண்டது. அடுத்த வருடம் நவம்பரில் இந்த பணிகள் முடிக்கப்பட உள்ளது. இதன் மூலம் வீட்டு வசதி வாரியத்திற்கு வருமானம் உயர வாய்ப்புள்ளது. இங்கு 314 வீடுகள் கட்டப்படுகிறது. ஏற்கனவே கட்டி வாடகைக்கு விடப்பட்ட 10,000 வீடுகள் வரை 60 இடங்களில் மோசமாக உள்ளது. அதை அகற்றி புதிதாகக் கட்ட முடிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்குப் பதில் 30,000 வீடுகளுக்கு மேல் கட்ட முடியும் என பேசினார்.

மேலும், 10,000 அல்லது 15,000 அளவு வீடுகளை அரசுக்கு வைத்துக்கொண்டு மற்றவற்றை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். 30 அல்லது 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி விற்கப்பட்ட வீடுகள் சிதைந்து போய் உள்ளது. இது முதலமைச்சர் கவனத்துக்குச் சென்று அவர் இதை உடனடியாக சரி செய்யச் சொன்னார். விற்கப்படாமல் இருக்கும் வீடுகளை விற்கவும் அல்லது வாடகைக்கு விடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

அத்துடன், புதிதாகக் கட்டிடம் கட்டுவதை விட ஏற்கனவே இருப்பதை ஒழுங்கு படுத்த இருக்கிறோம். நடக்கும் திட்டங்களையும் கவனித்து வருகிறோம். பணி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். கட்டுமான நிறுவனத்தை சங்கங்களே தேர்வு செய்துகொள்வது உள்ளிட்ட சலுகைகள் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். அரசும் அவர்களுக்கான உதவி அரசு சார்பில் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

ஏறத்தாழ 8000 வீடுகள் விற்கப்படாமல் உள்ளன. அவற்றை விற்க முயற்சி செய்கிறோம். இல்லை என்றால் வாடகை வீடாக மாற்ற உள்ளோம் கோயமுத்தூர், ஈரோடு, மதுரை, தோப்பூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் அபராத தொகை செலுத்தாதவர்களுக்கு 53 கோடி ரூபாய் அபராத வட்டி தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அரும்பாக்கம் பகுதியில் நடைபெற்று வரும் இந்த பணிகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 17ஆம் தேதி முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்படும் அப்போது விலை நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படும். உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை குடும்பத்தினருக்கு வீடு வழங்க உள்ளீர்களா? என்ற கேள்விக்கு, அது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒலிம்பிக் வீராங்கனைகளுக்கு இடஒதுக்கீடு முறை வரவேற்கத்தக்கது: அமைச்சர் மெய்யநாதன்

Vandhana

3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பொதுவெளியில் தோன்றினார் ஜாக் மா!

Jayapriya

கொரோனா விழிப்புணர்வு: மூக்கு வழியாக 100 பலூன்களை ஊதி சாதனை!

Dhamotharan