நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: ஜூலை 19 அனைத்துக்கட்சிக் கூட்டம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு வரும் 19-ஆம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் அடுத்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆக்ஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

சமீபத்தில் தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி ஆகிய 5 மாநில தேர்தல் முடிவடைந்தது. இதில் தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக காங்கிரஸ் திமுக இடையெ பிளவு ஏற்பட்டுள்ளது. அதேபோல மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப் பூசல் காரணமாக பிளவு ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில் நாடாளுமன்றம் கூடுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே ஏற்கனவே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு திமுக, கங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளால் தோற்கடிக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மழைக்கால கூட்டத்தொடரில் மீண்டும் கொண்டு வர பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல நீட் தேர்வு குளறுபடி உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன.

இந்த நிலையில் மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரைசுமூகமாக நடத்துவது குறித்தும், விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய முக்கிய மசோதாக்கள் குறித்தும் ஆலோசிக்க ஜூலை 19-ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.