வியட்நாம் துயரம்: விபத்திற்குள்ளான வேகப்படகின் கேப்டன் கைது…!

வியட்நாமில் விபத்திற்குள்ளான வேகப்படகின் கேப்டனை அந்நாட்டு ந்காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வியட்நாமில் உள்ள பு குவாக் தீவு (Phu Quoc Island) அருகே 32 இந்தியர்கள் நேற்று (ஜூலை 11) படகு சவாரிக்குச் சென்றுள்ளனர். 4 படகு ஊழியர்களுடன் கடலில் சென்று கொண்டிருக்கும் போது அவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழ் நாட்டை சேர்ந்த 10பேர் உட்பட 15 இந்தியர்கள் பலியாகினர். மேலும் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வியட்நாம் அரசு விசாரணை செய்து வருகிறது,

இந்த நிலையில் விபத்திற்கு காரணமாக வேகப்படகின் கேப்டனை வியட்நாம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 57 வயதான அவர் கடல்சார் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி வேகப்படகை இயக்கியதாகவும், அதுவே படகு கவிழக் காரணமானதாகவும் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.