கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட பெற்றோர் ? மம்மி மம்மி என கதறிய மகள் ! பதற வைக்கும் வைரல் வீடியோ

மும்பை கடற்கரையில் பெண் ஒருவர் தன் கணவருடன் சேர்ந்து பாறையில் அமர்ந்து, ஆபத்து தெரியாமல் அலையுடன் விளையாடிக் கொண்டிருந்த போது தீடீரென அந்த பெண்ணை கடல் அலை இழுத்து சென்றதோடு, கரையில் இருந்த அவரது…

மும்பை கடற்கரையில் பெண் ஒருவர் தன் கணவருடன் சேர்ந்து பாறையில் அமர்ந்து, ஆபத்து தெரியாமல் அலையுடன் விளையாடிக் கொண்டிருந்த போது தீடீரென அந்த பெண்ணை கடல் அலை இழுத்து சென்றதோடு, கரையில் இருந்த அவரது மகள் மம்மி.. மம்மி… என கதறும் பதற வைக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ராபலி பகுதியில் வசித்து வருபவர் முகேஷ் சோனார். இவர் தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, தன் குடும்பத்துடன் ஜூஹு சௌபாட்டிக்கு செல்ல முடிவு செய்திருந்தார். அப்போது அதிக அலை காரணமாக, கடற்கரைக்கு நுழைவது தடைசெய்யப்பட்டதை தொடர்ந்து, திட்டத்தை மாற்றிக்கொண்டு பாந்த்ரா நோக்கி சென்றுள்ளார். பின்னர் அங்கும் கடலில் சீற்றம் அதிகமாக இருந்தபோதும், முகேஷ்-ஜோதி தம்பதி கடற்கரையில் உள்ள பாறையில் அமர்ந்து வீடியோ, போட்டோ எடுத்துள்ளனர்.

அப்போது கடல் அலைகள் அவர்கள் அமர்ந்திருந்த பாறையில் வேகமாக மோதி மேலெழும்பியது. இருப்பினும் விபரீதத்தை உணராமல் ஜோதி தனது கணவர் முகேஷின் கையை இறுக்கமாக பிடித்து கொண்டு போட்டோ, வீடியோவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மிகப்பெரிய அலை வந்து பாறையில் அமர்ந்திருந்த முகேஷ், ஜோதி ஆகியோரை நிலைகுலைய செய்ததோடு, பாறையில் அமர்ந்திருந்த இருவரையும் கடலுக்குள் இழுத்து சென்றது. இதை பார்த்து அதிர்ச்சியான பொதுமக்கள் கடலில் விழுந்த முகேஷை விரைவாக மீட்டபோதிலும், ஜோதியை அவர்களால் மீட்க முடியவில்லை.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வந்து மீட்பு பணியில் தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில் மறுநாள் தான் ஜோதியின் உடல் மீட்கப்பட்டது. அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இதற்கிடையே கடல் அலையை பொருட்படுத்தாமல் முகேஷ், ஜோதி ஜோடி வீடியோவுக்கு போஸ் கொடுத்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர்கள் இருவரையும் கடல் அலை அடித்து செல்லும்போது அவர்களது மகள், மம்மி.. மம்மி.. என கதறும் குரல் அந்த வீடியோவில் பதிவாகி பலரையும் கலங்கடித்து உள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.