முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்லில் துணை ராணுவப்படை பாதுகாப்பு தேவை-அதிமுகவின் சி.வி.சண்முகம் வலியுறுத்தல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு மத்திய துணை ராணுவப்படை பாதுகாப்பு தேவை என தேர்தல் ஆணையத்திடம் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவின் இபிஎஸ் அணியினர் தென்னரசையும்,  ஓபிஎஸ் தரப்பினர் செந்தில் முருகனையும் வேட்பாளராக அறிவித்துள்ளனர். இதனால் இரண்டு தரப்பில் யாருக்கு இரட்டை இலை கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் சார்பில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது..

“இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர் இதனால் தேர்தலின் போது மத்திய துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணாஇயத்திடம்  கோரிக்கை விடுத்துள்ளோம்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் விண்ணப்பத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளோம்.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சி வேட்பாளரின் வேட்புமனுவை ஏற்பது தொடர்பாக சம்மந்தப்பட்ட தேர்தல் அதிகாரியே முடிவு செய்வார் என்று தெரிவித்தது. இந்நிலையில், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் தரப்பில் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் தமிழ்நாடு காவல்துறை பாதுகாப்பை நம்ப முடியாது என்பதால், மத்திய துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம் “ என சிவி சண்முகம் எம்பி தெரிவித்தார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இணையத்தை கலக்கி வரும் திருச்சிற்றம்பலம் பாடல்

EZHILARASAN D

இயல்பை விட அதிக மழை; தமிழ்நாட்டிற்கு எச்சரிக்கை

Halley Karthik

ட்ரெண்டிங்கில் ‘சூர்யா 42’ படத்தின் மோஷன் போஸ்டர்!

G SaravanaKumar