பரமத்தி வேலூர் விநாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை – திரளான பக்தா்கள் பங்கேற்பு!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பெருமாள் பிரதிஷ்டை  நடைபெற்றதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாமக்கல், பரமத்தி வேலூர்- செட்டியார் தெருவில் உள்ள 500 ஆண்டுகள்…

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பெருமாள் பிரதிஷ்டை  நடைபெற்றதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல், பரமத்தி வேலூர்- செட்டியார் தெருவில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வல்லப விநாயகர் ஆலயத்தில் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதில் ஸ்ரீதேவி, ஶ்ரீபூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள், கருடாழ்வார், கஜலட்சுமி,
தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சிவ துர்க்கை மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோருக்கு
கலசங்கள் ஸ்தாபிக்கப்பட்டு இரண்டு கால யாக வேள்விகளுடன் பூர்ணாகுதி
சமர்ப்பிக்கப்பட்டு கலச புறப்பாட்டுடன் மகா குடமுழுக்கு நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ரூபி.காமராஜ்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.