தஞ்சாவூர் அருகே தண்டவாளத்தில் டயரை வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடந்திருப்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எர்ணாகுளத்திலிருந்து காரைக்கால் நோக்கி சென்ற எர்ணாகுளம் விரைவு ரயிலானது தஞ்சை அருகே சென்ற போது , ரயில் தண்டாவாளத்தின் பக்கவாட்டில் டயர் கிடந்ததை பார்த்த பயணிகள் ரயிலில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது; இச்சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் ரயில் சக்கரத்தில் சிக்கியிருந்த டயரை வெளியே எடுத்தனர். இன்ஜின் சோதனைக்கு பின், ரயிலானது 40 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட தஞ்சை போலீசார் கனரக வாகனத்தின் டயர் எப்படி ரயில்வே தண்டாவாளத்திற்கு வந்தது? யாராவது தண்டாளத்தில் தூக்கி வீசியிருப்பார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி இதே போன்ற செயல் திருச்சி அருகே நடைபெற்றது. இதற்கு பிறகு ரயில்வே போலீசார் இரவு ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சமீபகாலமாக கற்கள், டயர், இரும்பு துண்டுகள் போன்றவற்றை ரயில்வே தண்டாளங்களில் இருந்து மீட்டுள்ளனர். தற்போது அரங்கேறியிருக்கும் இந்த செயலும், ரயிலினை கழ்விக்கும் நோக்கத்தில் செய்யப்பட்டதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








