முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அரசு பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்த நிபுணர் குழு: உயர் நீதிமன்றம் உத்தரவு!

அரசு பள்ளிகளில், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பள விகிதம் நிர்ணயிக்க, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பணிக்காலத்தையும் சேர்த்துக் கொள்ள கோரி தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக கல்வித்துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இரா.நீலகண்டன், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அடிப்படைக் கல்வித்தரத்தை உயர்த்தவும் – அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தமிழக அரசு அனைத்து ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்தார்.

அரசுப் பள்ளிகளை அருகிலுள்ள தொழில் நிறுவனங்கள் தத்தெடுத்து உள்கட்டமைப்பினை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் வலியுறுத்தினார்.

இதையடுத்து, அரசு பள்ளிகளில், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அரசுப் பள்ளிகளை அருகிலுள்ள தொழில் நிறுவனங்கள் தத்தெடுத்து உள்கட்டமைப்பினை மேம்படுத்துவது குறித்தும் கல்வித்துறை கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி, இந்த வழக்கின் விசாரணையை எட்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Advertisement:
SHARE

Related posts

முகக்கவசம் அணியாத வாகன ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை!

Gayathri Venkatesan

”மு.க.ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்கமாட்டார்”- முதல்வர் பழனிசாமி!

Jayapriya

சசிகலாவை வரவேற்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் திடீரென தீ விபத்து!

Niruban Chakkaaravarthi