இ-பதிவு இணையதளம் மாலைக்குள் சரிசெய்யப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ்

இ-பதிவு இணையதள பழுது இன்று மாலைக்குள் சரிசெய்யப்படும் என தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதியளித்துள்ளார். தமிழ்நாட்டில் இ-பதிவு நடைமுறையுடன் பல்வேறு சேவைகளுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று…

இ-பதிவு இணையதள பழுது இன்று மாலைக்குள் சரிசெய்யப்படும் என தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதியளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இ-பதிவு நடைமுறையுடன் பல்வேறு சேவைகளுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை இ-பதிவு இணையதளம் முடங்கியது. இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஒரே நேரத்தில் ஏராளமானோர் இ-பதிவு செய்ய முயற்சித்ததால் இணையதளப் பக்கம் முடங்கியதாகவும், இன்று மாலைக்குள் முழுவதும் சரிசெய்யப்படும் எனவும் உறுதியளித்தார். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், மக்கள் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் வெளியே செல்லுமாறு அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.