கருப்பு பூஞ்சை நோய்க்கு தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட உயிர் காக்கும் மதமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயை எதிர்கொள்ள ரூ.25கோடி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில் தமிழகம் தொற்று பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தொடர்ந்து முயன்றுவரக்கூடிய நிலையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க கோரியிருந்தது.
இதனையடுத்து தற்போது வரை (07-06-2021) ரூ.280.20 கோடி பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதில் கருப்பு பூஞ்சை நோய்க்கு தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகளை வாங்குவதற்கு ரூ.25 கோடி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆக்சிஜன் மற்றும், கொரோனா உயிர்காக்கும் மருந்துகளை வாங்குவதற்கு முதற்கட்டமாக ரூ.50 கோடி, ஆர்.டி.பி.சிஆர் சோதனை கருவிகளை வாங்கவும் இரண்டாம் கட்டமாக ரூ.50 கோடியும் ஒதுக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
மேலும், வெளிநாடுகளிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை பெறுவதற்கும் ரூ.41.40 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது கருப்பு பூஞ்சை நோய்க்கு தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகளை வாங்குவதற்கு ரூ.25 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 900க்கும் அதிகமானவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







