பம்மதுகுளம் ஸ்ரீகெங்கையம்மன் கோயில் தீமிதி விழா!

பம்மதுகுளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீகெங்கையம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபாடு செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பம்மதுகுளம் கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீகெங்கையம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழாவையொட்டி பக்தர்கள்…

பம்மதுகுளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீகெங்கையம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபாடு செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பம்மதுகுளம் கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீகெங்கையம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழாவையொட்டி பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து அலகு குத்தி தீசட்டி கரகம் ஏந்தி தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தி அம்மனை வழிபாடு செய்தனர். முன்னதாக பக்தி பரவசத்துடன் மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் ஆட்டம் ஆடி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கெங்கையம்மன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மேலும் தீமிதி விழாவில் செங்குன்றம் பாடியநல்லூர் சோழவரம் புழல் உள்ளிட்ட
சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமித்து அம்மனை தரிசனம் செய்தனர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.