கோயில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகமா? உச்ச நீதிமன்றம் தடை

கள்ளக்குறிச்சியில் கோயில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்ட உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு, வீரசோழபுர அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மதிப்பீடு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து…

கள்ளக்குறிச்சியில் கோயில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்ட உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு, வீரசோழபுர அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மதிப்பீடு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தர விட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதி உத்தரவுக்கு எதிராக, ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ண முராரி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுக்கவும், நிலத்தை மதிப்பீடு செய்யவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்

மேலும், மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்கவும் நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.