முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கட்டுமானப் பொருட்களை அத்தியாவசிய பட்டியலில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

அத்தியாவசிய பட்டியலில் கட்டுமான பொருட்களை சேர்க்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதி யின்படி, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

தடுப்பூசி போடும் பணிகள் திட்டமிடுதல் இல்லாமல் நடைபெறுவதாகக் கூறிய அவர், தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்களை காக்க வைக்க கூடாது என வலியுறுத்தினார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு நடத்தப்பட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார்.

கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகக் கூறிய அவர், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் கட்டுமான பொருட்களைச் சேர்க்க வேண்டும் எனவும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

Advertisement:
SHARE

Related posts

நாமக்கல்லில் பெரியார் சிலை மூடப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Saravana Kumar

இந்தியாவில் 56 பேர் டெல்டா பிளஸ் தொற்றால் பாதிப்பு

Gayathri Venkatesan

மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவரானார் சத்யா நாதெல்லா!