முக்கியச் செய்திகள் குற்றம்

குழந்தைகள் ஆபாசப்படங்களை அகற்றும் பணி தொடர்கிறது: டிவிட்டர் விளக்கம்

குழந்தைகள் ஆபாசப்படங்களை அகற்றும் பணி தொடர்வதாகவும், குழந்தைகள் பாலியல் சுரண்டலை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டோம் என்றும் டிவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

டிவிட்டர் பதிவில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் நேற்று(ஜூன்29) அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீசார், டிவிட்டர் இந்தியா மற்றும் டிவிட்டர் கம்யூனிகேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. குழந்தைகள் ஆணையம் சமர்பித்த டிவிட்டர் பக்கங்கள், டிவிட்டர் வெளியிட்ட படங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா, டிவிட்டர் இந்தியா நிர்வாக இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில், டிவிட்டர் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள குழந்தைகள் ஆபாசப்படங்கள், ஆட்சேபனைக்குரிய பதிவுகளை ஒருவாரத்துக்குள் நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து பேசிய டிவிட்டர் இந்தியா செய்தித் தொடர்பாளர், ” குழந்தைகள் பாலியல் சுரண்டலை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டோம். டிவிட்டர் விதிகளுக்கு எதிரான உள்ளடக்கங்களை அகற்றும் பணியில் செயல் திறனுடன் தொடர்ந்து பணியாற்றி வருகின்றோம். இது தொடர்பாக இந்திய சட்ட அமலாக்க துறைகள், தன்னார்வலர்கள் ஆகியோருடன் இணைந்து பிரச்னையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்,” என்று கூறியுள்ளார்.

Advertisement:

Related posts

பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.1.10 லட்சம் கோடி கடனுதவி: நிதியமைச்சர் அறிவிப்பு

Ezhilarasan

அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை!

Halley karthi

பொது முடக்கம் என்பதே கடைசி ஆயுதம் : பிரதமர் மோடி

Halley karthi