முக்கியச் செய்திகள் தமிழகம்

பழனி ரோப் கார் காலதாமதம் ஆனதற்கு கடந்த அதிமுக அரசே காரணம்: அமைச்சர் சேகர்பாபு

பழனி கோயில் இரண்டாவது ரோப் கார் திட்டப்பணிகள் காலதாமதம் குறித்து. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க வேண்டும் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலுக்கு உட்பட்ட உபகோவில்கள், கல்லூரிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்ட அவர், அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, பழனியை திருப்பதி போல தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் பழனி கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் எனவும் கூறினார்.

பக்தர்களின் வசதிக்காக இரண்டாவது ரோப்கார் பணியை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், இத்திட்டம் காலதாமதம் ஆனதற்கு கடந்த அதிமுக அரசே காரணம் எனவும் குற்றஞ்சாட்டினார்.

Advertisement:
SHARE

Related posts

கரூரில் சிறப்பு கொரோனோ மையம் திறப்பு!

Halley karthi

ஸ்பேஸ் எக்ஸ் மூலம் விண்வெளி சென்ற 4 பேர் பத்திரமாக திரும்பினர்

Ezhilarasan

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பிரதமர் பாராட்டு

Halley karthi