கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் பிரேசில், இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
தென் அமெரிக்க நாடுகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசிலில் நடைபெற்று வருகிறது. இதில் பிரேசில், அர்ஜெண்டினா, பெரு, கொலம்பியா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ரியோ டி ஜெனிரோவில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் பிரேசில், பெரு அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியின் 35வது நிமிடத்தில் பிரேசில் அணி வீரர் பக்கேட்டா கோல் அடித்து அசத்தினார். பதில் கோல் திருப்ப பெரு அணி எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால், 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றி பெற்றது.
ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா அல்லது கொலம்பியாவை பிரேசில் அணி எதிர்கொள்ளவுள்ளது.