பழனி – கொடைக்கானல் சாலையில் நடமாடிய ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் உள்ளது புளியமரத்து செட் பகுதி. இப்பகுதியில் காட்டு யானை ஒன்று உலா வரும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஒற்றை காட்டு யானையால் கோம்பைபட்டில் ஒருவரும் , சத்திரப்பட்டியில் ஒருவரும் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தனர்.இதனை தொடர்ந்து தற்பொழுது கொடைக்கானல் செல்லும் சாலையில் காட்டு யானை ஒன்று உலா வருவதால் அப்பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதற்கிடையே வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் இரவு நேரங்களில் காட்டு யானை நடமாட்டம் குறித்து கண்காணிக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
—கோ. சிவசங்கரன்







