அரியலூரில் ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை

அரியலூர் மாவட்டம், காடுவெட்டாங்குறிச்சியை சேர்ந்த வேம்பு என்ற நிறைமாத கர்ப்பிணியை , ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமணைக்கு அழைத்து செல்லும்போது வழியிலேயே ஆம்புலன்ஸில் ஆண் குழந்தை பிறந்தது. அரியலூர் மாவட்டம் , காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர்…

அரியலூர் மாவட்டம், காடுவெட்டாங்குறிச்சியை சேர்ந்த வேம்பு என்ற
நிறைமாத கர்ப்பிணியை , ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமணைக்கு
அழைத்து செல்லும்போது வழியிலேயே ஆம்புலன்ஸில் ஆண் குழந்தை பிறந்தது.

அரியலூர் மாவட்டம் , காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர்
வேம்பு. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது .
இதனால், கிராமத்தில் இருந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமணைக்கு
அழைத்து செல்லும் வழியிலேயே பிரசவ வலி அதிகரித்தது. மேலும், சாலையின்
ஓரமாக ஆம்புலன்சை நிறுத்தினர்.

மருத்துவ நிபுணர் செல்வகுமார் , பைலட் குமரவேல் உதவியுடன் பிரசவம்
பார்த்தார். அப்போது அழகான ஆண் குழந்தை பிறந்தது. மேலும், தாய் சேய்
இருவரையும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமணையில் சேர்ந்தனர்.
இருவரும் நலமாக உள்ள நிலையில் , பிரசவம் பார்த்த மருத்துவ நிபுணர்
செல்வகுமார், பைலட் குமரவேல் ஆகியோரை பொது மக்கள் பாராட்டினர்.

கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.