இந்தியாவிலேயே பழனி தொகுதி முக்கியத்துவம் வாய்ந்தது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்தியாவிலேயே ஆன்மிக தலமும், சுற்றுலா தலமும் இணைந்து காணப்படும் ஒரே தொகுதி பழனி சட்டமன்ற தொகுதிதான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில்…

இந்தியாவிலேயே ஆன்மிக தலமும், சுற்றுலா தலமும் இணைந்து காணப்படும் ஒரே தொகுதி பழனி சட்டமன்ற தொகுதிதான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் 85 லட்சம் ரூபாய் மதிப்பீல் புதிதாக கட்டப்பட்ட கண் அறுவை சிகிச்சை பிரிவு கட்டடத்தை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் திறந்து வைத்தனர்.

 

பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தியாவிலேயே ஆன்மிக தலமான பழனி மலைக்கோயிலும், சுற்றுலா தலமான மலைகளின் இளவரசி கொடைக்கானலும் இணைந்து காணப்படும் ஒரே சட்டமன்ற தொகுதி பழனி தொகுதி என பெருமை தெரிவித்தார். நாள்தோறும் உலகெங்கிருந்தும், பிற மாநிலம், மாவட்டங்கள் என இரண்டு லட்சம் பேர் இங்கு வந்து செல்கின்றனர் என்றார்.

எனவே, இந்த தொகுதிக்கு முதலமைச்சர் முக்கியத்துவம் அளிப்பதாக தெரிவித்த அவர், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விசாகன், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, சுகாதார துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.