முக்கியச் செய்திகள் தமிழகம்

நிதி ஒதுக்காமல் கோரிக்கை கேட்டு என்ன பயன் ? -சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு விமர்சனம்

நிதியே ஒதுக்கீடு செய்யாமல் சட்டமன்ற உறுப்பினர்களிடம் முதல்வர் கோரிக்கை கேட்டு என்ன பயன் கிடைக்கப் போகிறது என மதுரையில் செல்லூர் கே.ராஜு பேட்டியில் தெரிவித்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய 10 கோரிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த கூட்டத்தில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லூர் கே.ராஜு, வி.வி.ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார், செல்வம், தளபதி, வெங்கடேசன், பூமிநாதன் அய்யப்பன், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் சிங் கலோன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் இந்த ஆய்வுக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய கோரிக்கைகளின் சாத்திய கூறுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது, கூட்ட இறுதியில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில் “வரலாற்றில் முதன் முறையாக இப்படி ஒரு ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது” எனப் பேசியதற்கு அதிமுக எம்.எல்.ஏ க்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துக் கூட்டத்தைப் புறக்கணித்துச் செல்வதாக வெளியே செல்ல முற்பட்டனர். அப்போது அமைச்சர் மூர்த்தி அவர்களைச் சமாதானம் செய்து அமர வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறுகையில் “மக்கள் பிரச்சினை குறித்துப் பேசினால் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அரசு அதிகாரி போலவே பேசுகிறார், மதுரையில் 2 இலட்சம் முதியோர்களுக்கு உதவித் தொகை நிறுத்தம், நிதியே ஒதுக்கீடு செய்யாமல் சட்டமன்ற உறுப்பினர்களிடம் முதல்வர் கோரிக்கை கேட்டு என்ன பயன் கிடைக்கப் போகிறது எனத் தெரியவில்லை, சட்டமன்றத்தில் எடப்பாடியார் விளம்பரத்துக்காகச் சட்டையைக் கிழிக்க மாட்டார், மக்கள் மக்களிடையே பிரச்சினைகள் குறித்துப் பேசுவார்” எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நீலகிரியில் கடும் பனி பொழிவு ; தேயிலை செடிகள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை

Web Editor

அண்ணாமலையார் கோவில் திருவூடல் திருவிழா: அரோகரா முழக்கமிட்டு சாமி தரிசனம்

Web Editor

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேச தடை

G SaravanaKumar