முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ஆட்சி அதிகாரம் போகும்.. காதை பிடித்து இழுத்து வருவோம் – மம்தா ஆவேசம்

பாஜக ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போது, விசாரணை அமைப்புகளை வீட்டிற்குள் அனுப்பி காதை பிடித்து இழுத்து வருவோம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

 

மேற்குவங்காள மாநிலத்தில் உள்ள பபானூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருப்பதாக நினைத்து கொண்டு விசாரணை அமைப்புகளை வைத்து செயல்பட்டு வருகிறது என சாடினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

பாஜக ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோது, இதே விசாரணை அமைப்புகள், வீட்டுக்குள் புகுந்து உங்களை காதைப் பிடித்து வெளியே இழுத்துவரும் நாள் விரைவில் வரும் என்றார். துர்கா பூஜையின் போது, ​​அசுரனுக்குப் பதிலாக மகாத்மா காந்தியைப் போன்ற சிலைகாட்சிப்படுத்தப்பட்டதற்கு இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது ? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதுபோன்ற செயலுக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்ற அவர் தான் மிகவும் ஏமாற்றமடைந்தேன் என்றும், பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதால் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் கைது – கராத்தே தியாகராஜன் பேட்டி

Arivazhagan Chinnasamy

இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள தமிழ்நாடு அரசியல் கட்சிகள்

Arivazhagan Chinnasamy

கொரோனா; டோலோ விற்பனை இத்தனை கோடியா?

G SaravanaKumar