முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

கர்நாடகாவில் சட்டவிரோதமாக குடியேறிய பாகிஸ்தான் பெண் கைது

கர்நாடக மாநிலத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாகத் குடியேறிய பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கதிஜா மேரீன் (33) என்ற பெண் மொஹிதீன் என்பவரை 2014ஆம் ஆண்டு துபாயில் திருமணம் செய்து கொண்டார்.

அப்பெண் மூன்று மாத டூரிஸ்ட் விசா மூலம் கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திற்கு வந்து, அப்படியே தங்கிவிட்டார். இந்தியாவில் தங்கியிருந்த இந்த இடைப்பட்ட காலத்தில் அந்த பெண் மூன்று குழந்தைகளைப் பெற்றுள்ளார். ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் வாக்காளர் அட்டையும் பெற்றிருக்கிறார்.

கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் பக்தால் பகுதியில் தங்கியிருந்த காதிஜா குறித்து காவல்துறையினருக்குத் துப்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி இருந்தது, ஆதார், பான் கார்டுகள் பெற்றது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement:

Related posts

இந்தியாவில் இருந்து உடனே நாடு திரும்புங்கள்; அமெரிக்கா எச்சரிக்கை

Karthick

மாநில வளர்ச்சிக் கொள்கை குழுவினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

Jeba

மதுரையை சிட்னியாக மாற்றுவேன் – செல்லூர் ராஜூ!

Jeba