முக்கியச் செய்திகள் இந்தியா

நாட்டில் 29-வது நாளாக குறையும் கொரோனா பாதிப்பு!

நாட்டில் தொடர்ந்து 29-வது நாளாக கொரோனாவால் குணமடைபவர்களின் எண்ணிக்கை, பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,“நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் புதிதாக 91 ஆயிரத்து 702 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

நாட்டில் தினசரி கொரோனா தொற்று கண்டறியப்படும் விகிதம் 4 புள்ளி 48 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 403 பேர் உயிரிழந்ததாகவும் இறப்பு விகிதம் 1 புள்ளி 24 சதவீதம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது.

நேற்று மட்டும் 1 லட்சத்து 34 ஆயிரத்து 580 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தொடர்ந்து 29-வது நாளாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைவிட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
நாடு முழுவதும் 11 லட்சத்து 21 ஆயிரத்து 671 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

நாட்டில் இதுவரை 19 கோடியே 85 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், 4 கோடியே 75 லட்சம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வு நுழையவில்லை: மு.க.ஸ்டாலின்

Niruban Chakkaaravarthi

வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு!

Ezhilarasan

மதுரை எய்ம்ஸ் குறித்து RTI-யில் தவறான தகவல் அளித்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு!

Jeba