முக்கியச் செய்திகள் தமிழகம்

வண்டலூர் பூங்காவில் சிங்கங்களை மிரட்டும் உயிர்க்கொல்லி வைரஸ்!

கம்பீரம் என்று சொன்னாலே சிங்கம் தான் அனைவரது நினைவிற்கும் வரும். மனித குலத்தையே கதிகலங்க வைத்து வரும் கொரோனா அச்சம் சிங்கத்தையும் விட்டு வைக்கவில்லை.  வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் நடத்திய பரிசோதனையில் சிங்கங்களுக்கு, வன விலங்குகளின் உயிர் குடிக்கும் அதி பயங்கர வைரஸ் தொற்று பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


சிங்கங்களில் ஆப்ரிக்க சிங்கம், ஆசியச் சிங்கம் என இரண்டு பிரிவுகள் உண்டு. ஆப்ரிக்கா, ஐரோப்பா, ஆசியா உள்ளிட்ட கண்டங்களில் பரவிக் காணப்பட்ட சிங்கங்கள் தற்போது ஆப்ரிக்க கண்டம் மற்றும் இந்தியாவின் காடுகளுக்குள் சுருங்கி விட்டன. ஆப்ரிக்க சிங்கம் அக்கண்டத்தின் பல பகுதிகளில் பரவி வாழ்கின்றன . ஆனால் ஆசியச் சிங்கங்கள் இந்தியாவின் கிர் காடுகளிலேயே அதிகம் காணப்படுகின்றன.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல், மனித குலமே கண்ணீர் கடலில் மூழ்கி இருக்கும் நிலையில், வன விலங்குகளுக்கும் கொரோனா தொற்று பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதனால் சென்னைக்கு அருகே வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் சிங்கங்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  கொரோனா தொற்றால் ஒரு பெண் சிங்கம் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. ஆனால் அதை விட விலங்குகளுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுத்தும் கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் (Canine Distemper virus) எனும் இணை நோய் காணப்பட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் இந்த வைரசுக்கு நீலா எனும் பெண் சிங்கம் இறந்திருக்கிறது. மேலும் ஒரு சிங்கத்திற்கு CDV (சிடிவி) தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.


குஜராத்தின் கிர் காடுகளில் சில வருடங்களுக்கு முன்பு இந்த CDV நோய்த் தொற்றுக்கு சிங்கங்களைத் தாக்கியது. அதில் 100க்கும் மேற்பட்ட சிங்கங்கள் பலியாகின.  இதே நிலை தமிழகத்திலும் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வன விலங்குகளின் இந்த அதிக ஆபத்து நிறைந்த CDV வைரஸ்  பெரும்பாலும் நாய்களில் காணப்படுகிறது. உயிரியல் பூங்காவில் அதிகளவில் நாய் சுற்றித்திரிவதால் அதன் மூலம் மற்ற விலங்குகளுக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TNUVAS) சுகாதார இயக்குநர்  தினகர் ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு CDV தடுப்பூசி செலுத்துவதில்லை என்பதால்,  CD வைரஸ் பாதிப்பைத் தடுக்க உயிரியல் பூங்காவில் சுற்றித்திரியும் நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது அவசியம் என்றும்  கூறினார்.  CDV வைரஸ் தொற்றால், 80 விழுக்காடு அளவுக்கு இளம் விலங்குகளே பாதிக்கப்படுவதாகவும், வயதான விலங்களில் 50 விழுக்காடே பாதிக்கப்படுவதாகவும் தினகர் ராஜ் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

இலங்கை அகதிகளுக்கு கொரோனா நிவாரண உதவி: அரசு உத்தரவு!

Vandhana

திருநங்கையாக மாறிய பிரபல ஆடை வடிவமைப்பாளர்; இணையத்தில் குவியும் பாராட்டுகள்!

Jayapriya

வயல் வெளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சகோதரிகள்!

Niruban Chakkaaravarthi