பத்ம விருதுகள் 2026 அறிவிப்பு……!

2026- ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. கலை, இலக்கியம், பொது சேவை உள்ளிட்ட முக்கிய துறைகளில் சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இவ்விருதுகள் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், 2026- ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் நாட்டை சேர்ந்த 5 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் புண்ணிய மூர்த்தி நடேசன், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், ஓவியர் நீலகிரி ஆர். கிருஷ்ணன், சிற்பக் கலைஞர் காளியப்ப கவுண்டர், திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியை சேர்ந்த சிலம்பக் கலைஞர் கே.பழனிவேலுக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.