திசையன்விளை நல்ல மாடசாமி கோயில் கொடை விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திசையன்விளை செல்வமருதூர் ஸ்ரீநல்ல மாடசாமி கோயில் கொடை விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.   நெல்லை மாவட்டம், திசையன்விளை செல்வமருதூர் பகுதியில் ஸ்ரீ நல்ல மாடசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கொடை விழா கடந்த 18ம் தேதி…

திசையன்விளை செல்வமருதூர் ஸ்ரீநல்ல மாடசாமி கோயில் கொடை விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.  

நெல்லை மாவட்டம், திசையன்விளை செல்வமருதூர் பகுதியில் ஸ்ரீ நல்ல மாடசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கொடை விழா கடந்த 18ம் தேதி கும்பாபிஷேகத்துடன் தொடங்கியது. கொடை விழாவின் சிகர விழாவான பால் குடம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.  தொடர்ந்து, ஸ்ரீ நல்ல மாடசாமிக்கு அபிஷேகமும்,  தீபாராதனையும் நடைபெற்றது.

இதனையடுத்து நையாண்டி மேளம், கணியான் கூத்து, மகுட ஆட்டம் உள்ளிட்ட கிராமிய கலைகளுடன் ஸ்ரீ நல்லமாடன் மற்றும் பரிவார தேவதைகளின் சாமியாட்டம் களைகட்டியது.  பந்தங்களுடன் துள்ளி குதித்து ஆடிய நல்லமாடசாமியிடம் அருள்வாக்கும் அருளாசியும் பெற பக்தர்கள் குவிந்தனர்.

ஸ்ரீ நல்ல மாடசாமி கோயில் கொடை விழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  கொடை விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு காலை, மதியம், இரவு என 3 வேளையும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.