மூணாரில் வனபகுதியிலிருந்து சாலையில் படையப்பா யானை மீண்டும் இறங்கியது. மக்கள் வசிக்கும் பகுதிகளில் உலா வருவது அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கேரளா மாநிலம், மூணார் அருகேயுள்ள குற்றயார்வாலி எஸ்டேட் அருகேயுள்ள சாலையில் படையப்பா யானை வனப்பகுதியை விட்டு வெளியே வந்தது. யானை சாலையில் உலா வருவதை அறிந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை பின்னோக்கி நகர்த்தினர். பின்னர் சில மணி நேரம் கழித்து படையப்பா யானை மீண்டும் அமைதியாக வனப்பகுதி நோக்கி சென்றது. படையப்பா யானை அடிக்கடி உணவு தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளிலும், சாலைகளிலும் உலா வருவது அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: