புதுச்சேரியில் ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் மாணவர்கள் காயம் அடைந்த சம்பவத்தை தொடர்ந்து அதிகப்படியான மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோக்கள் மீது போக்குவரத்து போலீஸார் எச்சரிக்கை விடுத்து அபராதம் விதித்தனர்.
புதுச்சேரி நகரப் பகுதிகள் கடந்த வாரம் பள்ளி சிறுமிகள் ஏற்றி சென்ற ஆட்டோ
மீது பேருந்து மோதிய விபத்து ஏற்பட்டது. ஆட்டோவில் பயணம் செய்த 8 சிறுமிகள் உட்பட ஆட்டோ ஓட்டுநர் அனைவரும் காயமடைந்தனர். மேலும், அதிகப்படியான மாணவர்களை ஏற்றி செல்லும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்நிலையில் இன்று மாலை நகரப் பகுதியில் உள்ள பள்ளி முடிந்த பின்னர் ஆட்டோக்களில் மாணவர்களை ஏற்று சென்றபோது போக்குவரத்து துறை மற்றும்
போக்குவரத்து போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் அதிக அளவில் பள்ளி சிறுமிகளை ஏற்றி சென்ற 20க்கும் மேற்பட்ட ஆட்டோக்களின் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் இந்த ஆய்வு தொடரும் எனவும் போக்குவரத்து போலீஸார் தகவல் தெரிவித்தனர்.
ம. ஶ்ரீ மரகதம்







