ஆர்யா நடிக்கும் ’சார்பட்டா’ திரைப்படம் ஜூலை 22ம் தேதி நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது.
ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் திரைப்படம் ’சார்பட்டா’. இத்திரைப்படம் வரும் ஜூலை 22ம் தேதி நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அமேசான் ப்ரைம் இந்தியா ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. மேலும் நடிகர் ஆர்யா, இயக்குநர் ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஆர்யாவின் மனைவி சாயிஷா ஆகியோரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலை பகிர்ந்துள்ளனர்.
அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். காலாவிற்கு பிறகு ரஞ்சித், தற்போது ஆர்யாவை வைத்து இயக்கி இருக்கும் படம் ’சார்பட்டா’. இப்படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். குத்துச்சண்டை வீரர்களை பற்றிய படம் என்பதால் அதற்காக தீவிர உடற்பயிற்சி செய்து உடல் அமைப்பை மாற்றி இருக்கிறார்.
ஆர்யா, துஷாரா, கலையரசன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். முரளி ஒளிப்பதிவில், செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement: