சென்னையில் மூன்று நாட்களுக்குப் பிறகு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
கொரோனா 2-வது அலைக்கு பின்னர் தமிழ்நாட்டில் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5-ம் தேதி தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், மாநிலம் முழுவதும் உள்ள மையங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. கையிருப்பில் இருந்த குறைந்த அளவு தடுப்பூசிகளும் போடப்பட்டதால் பெரும்பாலான மையங்களில் தடுப்பூசி இருப்பு இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இந்நிலையில், 3 நாட்களுக்கு பிறகு சென்னையில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
கோடம்பாக்கத்தில் உள்ள மையத்தில் மக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி சென்றனர். மையங்களுக்கு நேரில் வருவோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், இணைய வழியில் முன்பதிவு கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 26 லட்சத்து 63 ஆயிரத்து 461 பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.







