முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

’எந்திரன்’ கதை தொடர்பான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

எந்திரன் படத்தின் கதை காப்புரிமை மீறல் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உட்பட பலர் நடித்து வெளியான படம், எந்திரன். ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற
இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்றும் காப்புரிமையை மீறி தன் அனுமதியை பெறாமல் கதையை திரைப்படமாக எடுத்திருப்பதாகக் கூறி, இயக்குனர் ஷங்கருக்கு எதிராக எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து ஆரூர் தமிழ்நாடன் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆரூர் தமிழ்நாடன் தரப்பில், எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என்பதற்கான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு, இது போன்று காப்புரிமை தொடர்பான வழக்குகளில் மேல் முறையீடு செய்ய சில வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. அத்தகைய வரம்புக்குள் இந்த மனு வராது என்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Advertisement:
SHARE

Related posts

சீனாவில் ஊர் சுற்றும் யானைக் கூட்டம்: வைரல் புகைப்படங்கள்!

Gayathri Venkatesan

ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

Jeba Arul Robinson

கோலாகலமாக நடைபெற்று வரும் குமாரபாளையம் ஜல்லிக்கட்டு…!

Saravana