தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலினின் பெரும் முயற்சியாலும், உழைப்பாலும் இந்த வெற்றி கிடைத்துள்ளதாகவும், ஸ்டாலின் தலைமையில் திறமையான செம்மையான அரசு அமைய வாழ்த்துவதாகவும், ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தேர்தல் முடிவுகளில் மத்திய அரசின் அதிகாரம், பணபலம் போன்றவற்றை எதிர்த்து, தன்னந்தனியாக போராடி வெற்றி பெற்ற மமதா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்தார். பாஜக நச்சு கொள்கையை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கையை மேற்கு வங்காளம் ஏற்படுத்தி இருப்பதாகவும் ப. சிதம்பரம் தெரிவித்தார்.