சொந்த தொகுதியில் வாக்களித்த ப.சிதம்பரம்!

2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் அவரது சொந்த தொகுதியில் இன்று வாக்களித்தார். தமிழகத்தில் 234 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கான…

2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் அவரது சொந்த தொகுதியில் இன்று வாக்களித்தார்.

தமிழகத்தில் 234 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெறுகிறது. திமுக கட்சித்தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் இன்று வாக்களித்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அவரது சொந்த தொகுதியான சிவகங்கையில் இன்று வாக்களித்தார். காலை 7 மணிக்கே வாக்குச்சாவடிக்குச் சென்று தனது வாக்கினைச் செலுத்தினார். அவருடன் காங்கிரஸ் கட்சியினரும் வாக்களிக்கச் சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.