மருத்துவ உபகரணங்கள் மீது விதிக்கப்படும் இறக்குமதி வரி ரத்து!

கொரோனா நோயாளிகள் நலனுக்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் தொடர்பான மருத்துவ உபகரணங்கள் மீது விதிக்கப்படும் இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமடைந்து வரும்…

கொரோனா நோயாளிகள் நலனுக்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் தொடர்பான மருத்துவ உபகரணங்கள் மீது விதிக்கப்படும் இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமடைந்து வரும் சூழலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவது தொடர்பாகவும், பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் தொடர்பான மருத்துவ உபகரணங்கள் மீது விதிக்கப்பட்டு வந்த இறக்குமதி வரி ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி மீதான இறக்குமதி வரியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆக்சிஜன், ஆக்சிஜன் தொடர்பான உபகரணங்கள், கொரோனா தடுப்பூசி இறக்குமதி வரி ரத்து அடுத்த 3 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.