இஸ்ரேலில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட, ஆயிரத்து 300 ஆக்சிஜன் சிலிண்டர்கள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் இந்தியா வந்தடைந்தன.
இந்தியாவில் கொரோனா 2ம் அலையின் தாக்கத்தால், பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளதால் பல்வேறு நாடுகளும் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.
அந்த வகையில் இந்தியாவுக்கு உதவுவதாக உறுதியளித்த இஸ்ரேல், ஆயிரத்து 300 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 400 வெண்டிலேட்டர்கள், கிருமிநாசினிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை விமானம் மூலம் அனுப்பி வைத்தது. அவை உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்திற்கு பத்திரமாக கொண்டுவரப்பட்டன.







