முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சினிமா

திரையரங்குகளில் விதிமுறைகளை உருவாக்க உரிமையாளருக்கு முழு உரிமை உள்ளது – உச்சநீதிமன்றம்

திரையரங்குகளில் விதிமுறைகளை உருவாக்க உரிமையாளருக்கு முழு உரிமை உள்ளது எனவும், ஆனால் தியேட்டர்களில் சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டுமென்றும், குழந்தைகளுக்காக எடுத்துவரப்படும் உணவுக்கு அனுமதி மறுக்கக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு திரையரங்குக்குகள்,
மல்ட்டி ப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு திரைப்படங்களைக் காண வருபவர்கள் வெளியிலிருந்து எடுத்து வரும் உணவுப் பொருட்களுக்கு அனுமதி மறுக்கக்கூடாது என திரையரங்க உரிமையாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது. அந்த உத்தரவுக்கு எதிராக அகில இந்திய திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில்
இன்று விசாரணைக்கு வந்தது. இதில் திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், திரையரங்கம் என்பது தனியாருக்கு செந்தமான இடம், அது பொதுகிடையாது. எனவே அதற்குள் என்ன மாதிரியான விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது உரிமையாளர்களுடைய விருப்பத்தை பொறுத்தது. அதனை அவர்கள் வரையறுக்கலாம் என வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனை மறுத்த எதிர்மனுதாரர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள்:- திரையரங்கில் சினிமா பார்க்க வருபவர்கள் ஒரு முறை பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி விட்டார்கள் என்றால் உணவை எடுத்து வருவதற்கு அனுமதி இல்லை என அந்த டிக்கெட்டில் தெரிவிக்கப்படாத வரை உணவு பொருளை எடுத்து செல்ல தடை விதிக்க முடியாது என தெரித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சந்திரசூட் திரையரங்க உரிமையாளர்கள் திரையரங்கிற்குள் உணவுப் பொருட்கள் எடுத்து வருவது தொடர்பான விதிமுறைகளை மற்றும் நிபந்தனைகளை உருவாக்க முழு உரிமை உள்ளது என உத்தரவிட்டார். அதேவேளையில் சினிமா பார்க்க வருபவர்கள் அவற்றை சாப்பிடாமல் இருக்கவும் அவர்களுக்கு உரிமை உள்ளது.  வெளி உணவு பொருட்களை திரையரங்கிற்குள் எடுத்து வரக்கூடாது என்பது திரையரங்க உரிமையாளர்களின் வர்த்தக ரீதியான முடிவு.
எனவே திரைப்படம் பார்க்க வருபவர்கள் திரையரங்க விதிகளை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.


அதே நேரத்தில் தரமான சுகாதாரமான குடிநீர் என்பது இலவசமாக திரையரங்குகளில்
வைக்கப்பட வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு பெற்றோர் உணவை எடுத்துச்
செல்லும்போது திரையரங்கு நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவிக்க கூடாது எனவும்
எனவும் உத்தரவிட்டார்.

 

– பரசுராமன்.ப 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

60 வயதானோருக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

Gayathri Venkatesan

‘வாழை இலை சாப்பாடு நல்ல ருசியாக இருந்தது’ – செஸ் வீரர் ட்வீட்

Arivazhagan Chinnasamy

திலீபனுக்கு நினைவஞ்சலி: இலங்கை தமிழ் எம்.பி திடீர் கைது

EZHILARASAN D