ராஜஸ்தான், ம.பி,கேரளாவை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரிலும் பரவியது பறவை காய்ச்சல்; 150க்கும் அதிகமான காகங்கள் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீரில் பறவை காய்ச்சலால் சுமார் 150க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சலால் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்து வருகின்றன. கேரளாவில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும்…

ஜம்மு காஷ்மீரில் பறவை காய்ச்சலால் சுமார் 150க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சலால் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்து வருகின்றன. கேரளாவில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், வாத்துகளுக்கு H5N8 வைரஸ் பாதிப்பால் பறவைக் காய்ச்சல் இருந்ததை அடுத்து, 40 ஆயிரம் கோழிகள் மற்றும் வாத்துக்கள் உயிருடன் புதைக்கப்பட்டன. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நூற்றுக்கணக்கான காகங்கள் உயிரிழந்தன. இதனை தொடர்ந்து ராஜஸ்தான் ஜம்மு காஷ்மீர் மட்டுமின்றி ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மத்திய அரசு பறவை காய்ச்சல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த பறவை காய்ச்சல் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மற்றும் நூற்றுக்கணக்கான காகங்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் உதம்பூர், கத்துவா மற்றும் ராஜோரி மாவட்டங்களில் மட்டும் சுமார் 150க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்துள்ளதாகவும் இது தொடர்பான தகவல்கள் அனைத்தும் பஞ்சாப்பில் உள்ள பரிசோதனை மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply