சாலையோர புளிய மரத்தில் கார் மோதி 3 பேர் பலி; மருத்துவ படிப்பு சேர்க்கைக்காக சென்ற போது நேர்ந்த விபரீதம் !!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் சௌந்தரராஜன் இவர் தனது மனைவி பிரியா மகன்…

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் சௌந்தரராஜன் இவர் தனது மனைவி பிரியா மகன் அபிஷேக் கிருத்திக் மற்றும் மகள் எஷ்வந்தினி ஆகிய நான்கு பேர் சென்னையில் நேற்று மருத்துவ கலந்தாய்வு காக சென்றுவிட்டு பல் மருத்துவ படிப்பில் சேருவதற்காக சென்னையிலிருந்து நாமக்கல் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ்குப்பம் அருகே உள்ள தாத்தா திரிபுரம் பகுதியை கடக்கும்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர புளிய மரத்தின் மீது அதி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே தாய் பிரியா மற்றும் மகன் அபிஷேக் கிருத்திக் ஆகியோர் உயிரிழந்தனர் மேலும் படுகாயமடைந்த சௌந்தரராஜன் மற்றும் மகள் எஷ்வந்தினி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சவுந்தரராஜன் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. மேலும் மகள் எஷ்வந்தினி மேல்சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விபத்து குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மகளின் மருத்துவப் படிப்பிற்காக சேர்க்கைக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply