அனுசக்தி வல்லமை உடைய அமெரிக்கா தான் எங்களின் மிகப்பெரிய எதிரி என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
உலகின் மிக தனிமையான நாடுகளில் ஒன்றாக வடகொரியா அறியப்பட்டு வருகிறது. அந்நாட்டின் அதிபராக உள்ள கிம் ஜாங் உன் உலகின் மிக சக்திவாய்ந்த ஆளுமைகளில் ஒருவராக பார்க்கப்பட்டு வருகிறார். வடகொரியாவின் அனு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும் சர்வதேச எதிர்ப்பையும் தாண்டி பல்வேறு அணு ஆயுத சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வடகொரியாவின் எதிரி நாடுகளில் ஒன்றாக பார்க்கப்படும் அமெரிக்கா பார்க்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை பெற்றது. இருப்பினும் அந்த சந்திப்பு மட்டுமின்றி 2019ல் நடைபெற்ற இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பாலும் உறவில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. இருப்பினும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பிறகு இருநாட்டு உறவில் மாற்றம் ஏற்படலாம் என கருதப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்கா தான் எங்களின் மிகப்பெரிய எதிரி என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். ஆளும் தொழிலாளர் கட்சி கொரியாவின் ஐந்தாண்டு மாநாட்டில் பேசிய அவர், எங்கள் புரட்சிக்கும் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய எதிரியாக உள்ள அமெரிக்காவை வீழ்த்துவதில் குறியாக இருக்க வேண்டும். யார் ஆட்சியில் இருந்தாலும் பரவாயில்லை, வட கொரியாவுக்கு எதிரான அதன் கொள்கையின் உண்மையான தன்மை ஒருபோதும் மாறாது” என்று பிடென் பெயரைக் குறிப்பிடாமல் அவர் தெரிவித்துள்ளார்.