முக்கியச் செய்திகள் தமிழகம்

“எல்லோரும் சமம் என்ற உள்ளத்துடன் நம் எண்ணமும் செயலும் அமைய வேண்டும்” – முதலமைச்சர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் வியாபாரம் செய்யும் பெண்னை பேருந்திலிருந்து நடத்துநர் கீழே இறக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நடத்துநரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்(65). தலைச்சுமையாக மீன்களை கொண்டு சென்று வியாபாரம் செய்து வருகிறார். அதைத்தொடர்ந்து இரவில் மகளிருக்கான இலவச அரசு பேரூந்தில் ஊர் திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதைப்போல் நேற்று இரவு மீன்களை விற்றுவிட்டு குளச்சல் பேருந்து நிலையத்தில் இருந்து வாணியக்குடி செல்லும் மகளிருக்கான அரசு பேரூந்தில் செல்வம் ஏறியுள்ளார். அப்போது அந்த பேருந்து நடத்துநர் செல்வத்தின் மீது மீன்நாற்றம் வீசுவதாக சொல்லி பேருந்தில் இருந்து இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, இரவு நேரத்தில் ஊர் திரும்ப முடியாமல் தவித்த மூதாட்டி செல்வம், குளச்சல் பேருந்து நிலைய நேர கட்டுப்பாட்டு அலுவலகம் முன்பு வந்து நின்று அழுதுள்ளார்.

இதை அங்கு நின்ற பயணிகள் சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். தற்போது, மூதாட்டி செல்வம் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டதாக கதறி அழும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீனவ மூதாட்டி இறக்கிவிடப்பட்ட சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் அரசு போக்குவரத்து கழகம் மீது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து கேள்வியெழுப்பாத ஓட்டுநர், மற்றும் நேரக்காப்பாளரையும் போக்குவரத்து நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, “மகளிர் மேம்பாட்டுக்காகக் கட்டணமில்லா உரிமைச்சீட்டை வழங்கி, அதை நடத்துநர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் இக்காலத்தில், ஒரு நடத்துநரின் இச்செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது.

எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும் என்றும், குமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது” என்றும் இந்த சம்பவத்திற்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

பேராசிரியர்களை கல்லூரிகளுக்கு நேரில் வரவழைக்கக் கூடாது : தமிழக அரசு!

Ezhilarasan

“எனது வாழ்க்கையில் அரசியல் அற்புதம் நடைபெறும்”: கமல்ஹாசன்

Halley Karthik

திமுக எதிர்க்கும் அளவிற்கு நாங்கள் வளர்ந்து விட்டோம்; சீமான்

Halley Karthik