தாறுமாறாக ஓடிய சொகுசு கார்; விபத்தில் ஒருவர் பலி

பெங்களூருவில் இன்று(டிச.07) மாலை தாறுமாறாக ஓடிய சொகுசு கார் ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சாம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவின் இந்திரா நகர் பகுதியில் மெர்சிடஸ் பென்ஸ் ரக…

பெங்களூருவில் இன்று(டிச.07) மாலை தாறுமாறாக ஓடிய சொகுசு கார் ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சாம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவின் இந்திரா நகர் பகுதியில் மெர்சிடஸ் பென்ஸ் ரக சொகுசு கார் ஒன்று தாறுமாறாக ஓடியுள்ளது. இந்த ஆட்டோ உட்பட 7 வாகனங்களின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், விபத்தை ஏற்படுத்திவிட்டு கார் ஓட்டுநர் தப்பிக்க முயன்றதாகவும் போக்குவரத்து காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலில் ஒரு இருசக்கர வாகனத்தை இடித்துவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார். இதன் காரணமாக மற்ற 6 வாகனங்களையும் மோதியுள்ளார். இதில் மற்றொரு காரில் பயணித்த பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மொத்தமாக 2 கார்கள், 2 ஆட்டோக்கள், 2 டெம்போக்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனங்களை மோதியுள்ளார். இதில் காயமடைந்த சொகுசு கார் ஓட்டுநர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.