மாற்றுக் கட்சியிலிருந்து அதிமுகவில் இணையும் அனைவருக்கும், கவுரவமான பதவிகள் வழங்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில், அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேமுதிக கட்சியைச் சேர்ந்த போடி நகர செயலாளர் சிங்கராஜ் தலைமையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில், அதிமுகவில் இணைந்தனர்.
பின்னர் துணை முதல்வருக்கும் எம்.பி ரவீந்தரநாத்துக்கும், சிங்கராஜ் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய ஓபிஎஸ், அதிமுகவுக்கு யார் வந்தாலும் அவர்களுக்கு உரிய மரியாதை அளித்து, கவுரவமான பதவிகள் வழங்கி சிறப்பிப்போம் எனவும் கூறினார்.







