மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள அகத்தியர் மலையில் புதிய வகை பட்டாம்பூச்சியைத் ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் முதன் முறையாக கண்டுபிடித்துள்ளனர்.
நாகதுபா சிங்கள ராமசாமி என பெயரிடப்பட்டுள்ள ஆறு வரி நீல பட்டாம்பூச்சியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பட்டாம்பூச்சி வகை ஆசியக் கண்டத்திலேயே ஸ்ரீலங்கா நாட்டில் மட்டும்தான் காணப்படும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த பட்டாம்பூச்சி இனத்தை கண்டுபிடிக்க திருவாங்கூர் வரலாற்று அமைப்பைச் சேர்ந்த சதாசிவன், கே. பைஜு, மும்பை இயற்கை வரலாற்று அமைப்பை சேர்ந்த ராகுல் கோட், தேனியை சேர்ந்த வன ஆராய்ச்சியாளர் எஸ்.ராமசாமி காமயா ஆகியோர் இந்த பட்டாம்பூச்சி வகையை கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய வகை பட்டாம்பூச்சி குறித்து ‘journal of Threatened Taxa’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டாம்பூச்சிக்கு தமிழகத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சி ஆராய்ச்சியாளர் ராமசாமி பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பட்டாம்பூச்சி நகாதுபா இனத்தைச் சேர்ந்தது மற்றும் அந்த பட்டாம்பூச்சியின் மேல் உள்ள ஆறு வரிகளை குறிக்கும்வகையில் சிக்ஸ் லைன் ப்ளூ என சேர்க்கப்பட்டு “நாகதுபா சிங்கள ராமசாமி’ என பெயரிடப்பட்டுள்ளது.