சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர் – தானமாக வழங்கப்பட்ட உடல் உறுப்புகள்!

இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், மேல ராமநாதபுரம் முனியப்ப கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டி (29).  இவர் கடந்த ஜூன் 8-ம்…

இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், மேல ராமநாதபுரம் முனியப்ப கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டி (29).  இவர் கடந்த ஜூன் 8-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன் பின்னர் உயர் சிகிச்சைக்காக  மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு  நிலையில் மூளைச்சாவு அடைந்தார். இந்த நிலையில் பாண்டியின் குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்தனர்.  அவருடைய கல்லீரல், கருவிழிகள் திருச்சி தனியார் மருத்துவமனைக்கும், சிறுநீரகம் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை மற்றும் நெல்லை அரசு மருத்துவமனைக்கும், இருதய வால்வு சென்னை தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.

உடல் உறுப்புகளை கொண்டு சென்ற ஆம்புலன்ஸிற்கு போக்குவரத்து தடையின்றி விரைந்து செல்ல போலீசார் ஒழுங்குப்படுத்தினர்.  பின்னர் பாண்டியின் உடல் அவரது குடும்பத்தாரிடம்  ஒப்படைக்கப்பட்டது.

அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.