திருப்பூர் : சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்ட 323 வழக்குகள்..!!

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வில் 1625 வழக்குகளில் 323 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 7 அமர்வுகளாக சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வு நடைபெற்றது. திருப்பூர்…

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வில் 1625
வழக்குகளில் 323 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 7 அமர்வுகளாக சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வு நடைபெற்றது. திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம்
ஜெ. நடராஜன் தலைமையேற்று சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை துவக்கி வைத்தார்.

ஏழு அமர்வுகளாக நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 1625 வழக்குகள்
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 323 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ17 கோடி  இழப்பீடு தொகை பெற்று கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.