முக்கியச் செய்திகள் தமிழகம்

புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பை மறுசீரமைக்க உத்தரவு

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அரசு குடிப்பில் 45 நாட்களுக்குள் மறுசீரமைப்பு பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகள் தரமற்றவையாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. இங்கு முதல் பகுதி குடியிருப்பானது 112.16 கோடி ரூபாய் செலவில் ஒன்பது அடுக்குகளை 864 வீடுகளைக் கொண்டுள்ளது. இன்னொரு பிரிவில் 139.13 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 1056 வீடுகள் உள்ளன. புதிய வீடுகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் பயனாளிகள் கூறுகின்றனர்.

கட்டி முடிக்கப்பட்ட இந்த குடியிருப்புகள் கொரோனா தொற்று அதிகமிருந்த காலத்தில் தற்காலிக கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டன. அப்போது நோயாளிகளுக்கு படுக்கைகள் போன்றவற்றை எடுத்துச் சென்றபோது குடியிருப்புகள் சேதம் அடைந்ததாக சொல்கின்றனர். சேதத்தை பார்வையிட வந்த எழும்பூர் எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ பரந்தாமனை சூழ்ந்து நின்று மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இதையடுத்து, குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என தெரிவித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யும் பொறுப்பு ஐஐடியிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ஆய்வு அறிக்கையை ஐ.ஐ.டி வழங்கிய பின்னர், அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதனையடுத்து குடியிருப்பின் நிலை குறித்து ஐஐடி நிபுணர்கள் தமிழ்நாடு அரசிடம் அறிக்கையை அளித்தனர்.

இந்நிலையில் அளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், 45 நாட்களுக்குள் தொடர்புடைய கட்டுமான நிறுவனம் மீண்டும் பூச்சு வேலைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், கழிவறைகளில் அமைக்கப்பட்டுள்ள பொருட்களை மாற்ற வேண்டும் என்றும் கட்டுமான நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா தடுப்பூசி 3-வது டோஸ் அவசியமா?

Gayathri Venkatesan

மத்திய பட்ஜெட்: தமிழகத்திற்கான அறிவிப்புகள் என்னென்ன?

Saravana

விமானம் நடுவானில் பறந்தபோது மாரடைப்பு ஏற்பட்ட விமானி உயிரிழப்பு

Saravana Kumar